ஆதரவளித்துவிடுவீர்களா என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். சற்று யோசித்த ராமதாஸ் சிரித்துக்கொண்டே, “ஆமாம்.. கூட்டணி என்றால் ஆதரவு அளிக்கத்தான் வேண்டும்” என பதிலளித்தார்.
அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்று ஆதரவு தருவதாக குற்றச்சாட்டு உள்ளது என மற்றொரு செய்தியாளர் கேட்டார். அதற்கு “நாங்கள் மத்திய அமைச்சர் பதவி கேட்கவில்லை. அவர்கள் கொடுத்தால்கூட வாங்கமாட்டோம்” என்று பதிலளித்துள்ளார்.