குடியுரிமைச் சட்டத் திருத்தம்: இதற்காகத் தான் ஆதரவளித்தோம்- ராமதாஸ் சொன்ன காரணம்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு பாமக ஆதரவளித்ததற்கான காரணத்தை அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (டிசம்பர் 13) கூறியுள்ளார்.


இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிராக உள்ள இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு இந்த கட்சிகள் ஆதரவளித்ததால் கடும் விமர்ச்னங்களுக்கு உள்ளாகிவருகின்றன.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உயிரோடிருந்தவரை எதிர்த்து வந்த திட்டங்களுக்கு தற்போதையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆதரவளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்துக்கு அதிமுக ஆதரவளித்திருக்ககூடாது என்ற குரல் வலுப்பெற்றுள்ளது.


பாமக நிறுவனர் ராமதாஸும் மாநிலங்களவை உறுப்பினர் அன்பு மணி ராமதாஸும் ஈழத் தமிழர்களின் நலன் குறித்து பலமுறை பேசியுள்ள நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்தது அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்தோம்” என்று கூறினார்.