அம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்!

ஜினி பிறந்தநாளை முன்னிட்டு, உழைப்பாளி உணவகம் என்ற பெயரில் ரஜினி தரப்பு உணவகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.


ஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் இன்று கோயிலில் பூசைகள் செய்தும், பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர்.


இந்த கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் நடக்க, வழக்கம்போல் இந்த முறையும் ரஜினி தலைமறைவாகினார். இந்த முறை இமயமலைக்குச் செல்லவில்லை. பதிலாகப் பெங்களூரில் உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் ரஜினி சமீப நாட்களாக அரசியல் கணிப்போடவே அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது ரஜினியின் மக்கள் மன்றம் சார்பாக அம்மா உணவகத்திற்குப் போட்டியாக உழைப்பாளி உணவகம் என்ற உணவகத்தைத் திறந்துள்ளனர்.