மதுரை மாவட்டம் மேள ஒரத்தனுர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. ராணுவ வீரர். இவர் மனைவி நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சக்தி மிகவும் சோர்ந்து காணப்பட்டுள்ளார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் உள்ள டிரான்பார்மரில் ஏறிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து வந்த நிலையில், அவர் மீது அதிக வோல்டேஜ்ஜுடன் மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அந்த நபருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது